< Back
மாநில செய்திகள்
திருத்தணியில் புதர் மண்டி கிடக்கும் கோவில் வளாகம்; சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருத்தணியில் புதர் மண்டி கிடக்கும் கோவில் வளாகம்; சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

தினத்தந்தி
|
23 Dec 2022 8:02 PM IST

திருத்தணியில் புதர் மண்டி கிடக்கும் கோவில் வளாகத்தை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பராமரிப்பில்லாமல்...

திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான ஸ்ரீ கோட்ட ஆறுமுக சாமி கோவிலில் நந்தி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

கடந்த சில மாதங்களாக கோவில் வளாகத்தை சுற்றியுள்ள இடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் கோவில் வளாகத்தைச் சுற்றி உள்ள இடத்தில், செடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது.

கோரிக்கை

இந்த புதர்களில் இருந்து பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அதிகளவில் கோவில் வளாகத்தில் உலா வருவதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். பக்தர்கள் மற்றும் பொது மக்களின் நலன் கருதி, கோட்ட ஆறுமுகசாமி கோவில் வளாகத்தைச் சுற்றியுள்ள புதர்களை அகற்றிட முருகன் கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்