கன்னியாகுமரி
கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
|நாகர்கோவிலில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் ேதடி வருகிறார்கள்.
நாகர்கோவில் வடசேரி புளியடி பகுதியில் சுடலை மாடசாமி கோவில் உள்ளது. நேற்றுமுன்தினம் பூஜைகளை முடித்து விட்டு பூசாரி கோவிலை பூட்டி சென்றார்.
பின்னர் நேற்று காலையில் மீண்டும் கோவிலுக்கு வந்த போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது கோவில் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உடனே உள்ளே சென்று பார்த்த போது உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம்கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது.
இதுபற்றி கோவில் நிர்வாகிகள் வடசேரி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதனை தொடர்ந்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது கோவிலுக்குள் ஒரு வாலிபர் செல்வதும், பணத்தை எடுத்து கொண்டு வெளியே தப்பி செல்வதும் போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி மர்மஆசாமியை தேடிவருகின்றனர்.