< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
லாட்டரி சீட்டுகள் வைத்திருந்த வாலிபர் சிக்கினார்
|14 Aug 2022 10:01 PM IST
லாட்டரி சீட்டுகள் வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்
கேரள மாநிலம் குமுளியில் இருந்து விற்பனை செய்வதற்காக மொத்தமாக லாட்டரி சீட்டுகளை கடத்தி வருவதாக லோயர்கேம்ப் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அல்போன்ஸ்ராஜா தலைமையில் போலீசார் தமிழக எல்லையான குமுளி பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படி பையுடன் நின்ற ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டியை சேர்ந்த திவாகரன் (வயது 22) என்பது தெரியவந்தது. போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 4 ஆயிரத்து 260 லாட்டரி சீட்டுகள் இருந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.