< Back
மாநில செய்திகள்
போலி பாஸ்போர்ட்: துபாயில் இருந்து விமானத்தில் திருச்சி வந்த வாலிபர் சிக்கினார்
திருச்சி
மாநில செய்திகள்

போலி பாஸ்போர்ட்: துபாயில் இருந்து விமானத்தில் திருச்சி வந்த வாலிபர் சிக்கினார்

தினத்தந்தி
|
9 Dec 2022 1:46 AM IST

போலி முகவரியில் பாஸ்போர்ட்டு பெற்று, துபாயில் இருந்து விமானத்தில் திருச்சி வந்த வாலிபர் சிக்கினார்.

செம்பட்டு:

வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று காலை 11.45 மணிக்கு திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது நாகை மாவட்டம் திருசேரங்கோட்டையை சேர்ந்த விஜய்(வயது 25) என்பவர் போலியான முகவரியில் பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு சென்று திரும்பியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் அவரை ஏர்போர்ட் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்