< Back
மாநில செய்திகள்
வாலிபருக்கு கத்திக்குத்து
மதுரை
மாநில செய்திகள்

வாலிபருக்கு கத்திக்குத்து

தினத்தந்தி
|
20 April 2023 2:10 AM IST

மதுரையில் முன்விரோதம் காரணமாக வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது.

மதுரை அனுப்பானடி பொண்ணு பிள்ளை தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தபாண்டி (வயது 21). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் முன் விரோதம் இருந்தது. சம்பவத்தன்று காலை ஆனந்தபாண்டி அனுப்பானடி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள டீக்கடைக்கு சென்றார். அப்போது அவரை 5 பேர் கும்பல் வழிமறித்து தகராறு செய்தது. பின்னர் அந்த கும்பல் அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தி விட்டு தப்பி விட்டது. இது குறித்து அவர் தெப்பக்குளம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலையரசன் மற்றும் அவரது கூட்டாளிகளான மதுசூதனன், தனசேகரன், வேல்பிரதாப், ஐராவதநல்லூர் பூமிநாதன் ஆகிய 5 பேரை தேடி வருகிறார்கள்.

Related Tags :
மேலும் செய்திகள்