< Back
மாநில செய்திகள்
வாலிபருக்கு கத்திக்குத்து
தேனி
மாநில செய்திகள்

வாலிபருக்கு கத்திக்குத்து

தினத்தந்தி
|
9 Oct 2022 9:58 PM IST

ஆண்டிப்பட்டியில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது.

ஆண்டிப்பட்டி, பாப்பம்மாள்புரம் பகுதியை சேர்ந்தவர் கணபதி (வயது 29). சக்கம்பட்டி ஜெ.ஜெ.நகர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த். நேற்று இரவு இவர்கள், இருவரும் அந்த பகுதியில் உள்ள தனியார் மதுபான பாருக்கு சென்றனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் தகராறாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த அரவிந்த் மறைத்து வைத்திருந்த கத்தியால் கணபதியின் வலதுபுற நெஞ்சில் குத்தினார். இதையடு்த்து அங்கிருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்