< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
வாலிபர் பலி
|12 Sept 2023 1:21 AM IST
கதிராமங்கலம் அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்த வாலிபர் பலியானார்.
கதிராமங்கலத்தை அடுத்த சோழியவிளாகம் கீழத்தெருவை சேர்ந்தவர் வினோத் (வயது23). நெல் அறுவடை எந்திர டிரைவரான இவர் நேற்று தனது நண்பர்கள் சோழியவிளாகம் தினேஷ் (25), கிடாத்தலைமேடு முரளி (25) ஆகியோருடன் பந்தநல்லூரில் இருந்து சோழியவிளாகத்திற்கு ஒரே மோட்டார்சைக்கிளில் சென்றனர். அப்போது பந்தநல்லூர் அரசடி அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். மேலும் அங்கு நின்று கொண்டிருந்த நெய்குப்பை பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (43) என்பவரின் மொபட் மீது மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக வினோத் இறந்தார். லேசான காயமடைந்த 3 பேரும் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து பந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.