< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
கஞ்சா வைத்திருந்த வாலிபர் பிடிபட்டார்
|26 Sept 2023 5:45 AM IST
தேவதானப்பட்டி அருகே வத்தலக்குண்டு சாலையில், கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தேவதானப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்மணிகண்டன் மற்றும் போலீசார் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வத்தலக்குண்டு சாலையில், வீரம்மாள் கோவில் பின்புறம் சந்தேகப்படும் வகையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், மஞ்சளாறு பகுதியை சேர்ந்து சேவியர் ஷியாம் பால் (வயது 27) என்பதும், கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.