< Back
மாநில செய்திகள்
திருமண மண்டபத்தில் வாலிபர் அடித்துக்கொலை
திருப்பூர்
மாநில செய்திகள்

திருமண மண்டபத்தில் வாலிபர் அடித்துக்கொலை

தினத்தந்தி
|
26 Oct 2023 6:54 PM IST

அவினாசி அருகே திருமண மண்டபத்தில் குடிபோதையில் தகராறு செய்த வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

சேவூர்,

அவினாசி அருகே திருமண மண்டபத்தில் குடிபோதையில் தகராறு செய்த வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக சமையல் வேலைசெய்யும் 2 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அடித்துக்ெகாலை

திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த ராக்கியாபாளையம் பிரிவு அருகே தனியார் திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் நேற்று முன் தினம் இரவு விசேஷ நிகழச்சி நடைபெற்றது. அந்த விசேஷத்திற்கு சமையல் செய்ய கரூர் புகலூரை சேர்ந்த பிரகாஷ் (வயது 44), நாமக்கலை சேர்ந்த சுந்தரமூர்த்தி (49) ஆகியோர் வந்தனர்.

அன்று நள்ளிரவு நேரம் 35வயது மதிக்க வாலிபர் ஒருவர் மதுபோதையில் மண்டபத்திற்கு வந்துள்ளார். அப்போது அந்த வாலிபருக்கும் இவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது பிரகாசும், சுந்தரமூர்த்தியும் சேர்ந்து அந்த வாலிபரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் கீழே விழுந்த அந்த வாலிபர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

2 பேர் கைது

இது குறித்து அவினாசி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் வாலிபரை அடித்துக்கொன்றதாக சமையல் தொழிலாளிகள் பிரகாஷ் மற்றும் சுந்தரமூர்த்தியை போலீசார் கைது செய்தனர். திருமண மண்டபத்தில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
மேலும் செய்திகள்