< Back
மாநில செய்திகள்
மொளசி அருகே தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபர் கைது
நாமக்கல்
மாநில செய்திகள்

மொளசி அருகே தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபர் கைது

தினத்தந்தி
|
28 Jun 2023 12:07 AM IST

மொளசி அருகே தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் அடுத்த மொளசி அருகே வேப்பம்பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன். தேங்காய் குடோன் நடத்தி வருகிறார். இவரது தேங்காய் குடோனில் கோரக்குட்டை பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 27), ஈரோடு மொடக்குறிச்சியை சேர்ந்த பாலமுருகன் (23) ஆகிய இருவரும் தொழிலாளியாக வேலை செய்து வருகின்றனர். அவர்கள் இருவரும் நேற்று முன்தினம் வேலை முடிந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது செல்வராஜ், பாலமுருகன் ஆகிய இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் செல்வராஜ் தான் வைத்திருந்த கத்தியால் பாலமுருகன் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். பலத்த காயமடைந்த பாலமுருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் மொளசி மொளசி போலீஸ் நிலையத்தில் புகார் அளிதார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார், செல்வராஜ் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

மேலும் செய்திகள்