< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரியில்தொழிலாளியிடம் பணம் பறித்த வாலிபர் கைது
|1 Jun 2023 12:15 AM IST
கிருஷ்ணகிரி கோபால கிருஷ்ணா காலனியை சேர்ந்தவர் கணேஷ் (வயது 23). கூலித்தொழிலாளி. இவர் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் கணேசிடம் இருந்து ரூ.500-ஐ பறித்து கொண்டு தப்பியோட முயன்றார். இதையடுத்து கணேஷ், அந்த நபரை பிடித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் ஒப்படைத்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார். அவர் கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டியை சேர்ந்த கோகுல்நாத் (23) என தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.