நாமக்கல்
கூலித்தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது
|மோகனூர அருகே கூலித்தொழிலாளியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மோகனூர்
கரூர் மாவட்டம், மண்மங்கலம் அருகில் உள்ள என்.புதூர், வெள்ளாதாரை தெருவை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 52). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 27-ந் தேதி மோகனூரில் இருந்து வாங்கல் செல்லும் சாலையோரம் அரசு டாஸ்மாக் கடையில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர், சசிகுமாரை திடீரென மது பாட்டிலால் தலையில் தாக்கி, தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். காயம் அடைந்த சசிகுமார் மோகனூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து அவர் மோகனூர் போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் மோகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையசூரியன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் மோகனூர் பெரியசாமி காலனியைச் சேர்ந்த அர்ஜுன் மகன் சோலைராஜா (30) என்பவர் சசிகுமாரை தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சோலைராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.