< Back
மாநில செய்திகள்
டாஸ்மாக் பாரில் தகராறு; வாலிபர் கைது
நாமக்கல்
மாநில செய்திகள்

டாஸ்மாக் பாரில் தகராறு; வாலிபர் கைது

தினத்தந்தி
|
30 April 2023 12:15 AM IST

மொளசி அருகே டாஸ்மாக் பாரில் தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பள்ளிபாளையம்

மொளசி அருகே ராக்கிவலசு பகுதியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. அந்த கடை அருகே ஆனந்த் (வயது 53) என்பவர் பார் நடத்தி வருகிறார். நேற்று மாலை மொளசி பகுதியைச் சேர்ந்த மயில்சாமி (26), ராக்கிவலசு பகுதியை சேர்ந்த மற்றொரு மயில்சாமி (40) ஆகிய இருவரும் பாருக்கு வந்தனர். பின்னர் ஆனந்திடம் மது கேட்டு தகராறு செய்து பாட்டிலை உடைத்தும், தகாத வார்த்தையால் மிரட்டியும் திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆனந்த் மொளசி போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் வழக்குப்பதிவு செய்து மொளசியை சேர்ந்த மயில்சாமியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். மேலும் தலைமறைவான மற்றொரு மயில்சாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்