< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
|17 April 2023 2:31 AM IST
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பேட்டை:
நெல்லை டவுன் காண்மியான் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் அப்துல் காதர் ஜெய்லானி (வயது 30). இவர் டவுன் கோடீஸ்வரர் நகர் பகுதியில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு உறவினர் வீட்டுக்கு சென்றார்.
திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் நந்தினி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
அப்போது பேட்டையை சேர்ந்த பாலையா என்ற சந்தனகுமார் (24) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரிய வந்தது.
சந்தனகுமாரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை மீட்டனர்.