< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
|15 April 2023 1:46 AM IST
பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தாழையூத்து:
நெல்லையை அடுத்த தாழையூத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து (வயது 22). சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள கடையில் நின்று ஒரு பெண் போனில் பேசிக்கொண்டு இருந்தார்.
அந்த பெண்ணிடம் இசக்கிமுத்து சைகையால் போன் நம்பரை கேட்டதாகவும், அதற்கு அந்த பெண் கோபமாக பேசி திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் இசக்கிமுத்து, அந்த பெண்ணை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து தாழையூத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த இசக்கிமுத்துவை நேற்று கைது செய்தார்.