< Back
மாநில செய்திகள்
பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

தினத்தந்தி
|
13 April 2023 3:29 AM IST

பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை அருகே தருவை அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் மனைவி லட்சுமி (வயது 42). இவர் சம்பவத்தன்று தருவை பஸ் நிறுத்தத்தில் நின்றுகொண்டு இருந்தாா். அப்போது அங்குவந்த தருவை இந்திரா காலனியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (28) என்பவர் லட்சுமியிடம் முன்விரோதம் காரணமாக தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து லட்சுமி முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்