< Back
மாநில செய்திகள்
வாலிபர் கைது
திண்டுக்கல்
மாநில செய்திகள்

வாலிபர் கைது

தினத்தந்தி
|
29 March 2023 10:06 PM IST

திண்டுக்கல்லில், மதுபார் ஊழியரிடம் பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். மதுபார் ஊழியர். நேற்று இவர், திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த குமரன்திருநகர் பகுதியை சேர்ந்த ராஜகோபால் (வயது 24), கத்தியை காட்டி மிரட்டி ராமச்சந்திரனிடம் பணம் பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராமச்சந்திரன், திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜகோபாலை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்