தென்காசி
திருவிழா பாதுகாப்புக்கு வந்த போலீசாருக்கு கொலை மிரட்டல்
|சங்கரன்கோவில் அருகே திருவிழா பாதுகாப்புக்கு வந்த போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வாலிபரை கைது செய்தனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள சின்ன கோவிலாங்குளம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கணபதி பாண்டியன் மற்றும் போலீசார் ஈச்சம் பொட்டல்புதூரில் உள்ள கருப்பசாமி கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பெண் அழைப்பு நிகழ்ச்சிக்காக மலையடிப்பட்டி கிராமத்திலிருந்து சிலர் வந்துள்ளனர். அவர்கள் கோவில் அருகே பட்டாசு வெடிக்கவும், டிரம்ஸ் அடிக்கவும் முயற்சி செய்து உள்ளனர். இதை அறிந்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், கோவிலை விட்டு கொஞ்சம் தூரம் தள்ளி பட்டாசும், டிரம்ஸும் அடித்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர்.
அப்போது செந்தட்டியாபுரத்தை சேர்ந்த மருதநாயகம் மகன் பிரவீன் குமார் (வயது 21) என்பவர் கணபதி பாண்டியன் உள்ளிட்ட போலீசாரிடம் வாக்குவாதம் செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கணபதி பாண்டியன் சின்ன கோவிலாங்குளம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.