< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
3½ கிலோ கஞ்சா பறிமுதல்; வாலிபர் கைது
|15 Jan 2023 12:30 AM IST
3½ கிலோ கஞ்சா விற்பனை செய்த வாலிபரை கைது செய்தனர்.
நாமக்கல் முதலைப்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அம்பிகா, சப்-இன்ஸ்பெக்டர் ராதா தலைமையிலான குழுவினர் அங்கு சென்று சோதனை நடத்தினர்.அப்போது காட்டுப்பகுதியில் ஒரு பையில் 3½ கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சேலம் பொன்னம்மாபேட்டையை சேர்ந்த இளங்கோவன் (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்தனர். முதலைப்பட்டி பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் இளங்கோவன் காட்டுப்பகுதியில் புதரில் மறைத்து வைத்து கஞ்சா விற்பனை செய்வது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.