< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
வாலிபர் கைது
|6 Oct 2022 12:15 AM IST
புகையிலை பொருட்கள் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் டவுன் போலீசார், சங்கரன்கோவில்- ராஜபாளையம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை வழிமறித்து சோதனை செய்தனர்.
இதில் அவர், சங்கரன்கோவில் கிருஷ்ணசாமி வீதியைச் சேர்ந்த தேவேந்திரன் மகன் சக்திவேல் (வயது 26) என்பதும், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து சக்திவேலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு சுமார் ரூ.31 ஆயிரம் ஆகும்.