< Back
மாநில செய்திகள்
விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கார் சேதம்; வாலிபர் கைது
நாமக்கல்
மாநில செய்திகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கார் சேதம்; வாலிபர் கைது

தினத்தந்தி
|
23 Sept 2022 12:26 AM IST

மங்களபுரம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி காரை சேதப்படுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நாமகிரிப்பேட்டை

நாமக்கல் மாவட்ட விடுதலை சிறுத்ைதகள் கட்சி துணை செயலாளராக பெரியசாமி என்பவர் உள்ளார். இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன் காரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி மற்றும் திருமாவளவன் படம் வைத்து கொண்டு நாமகிரிப்பேட்டை அருகே மங்களபுரம் திம்மநாயக்கன்பட்டி நெடுஞ்சாலை பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென காரை தாக்கி சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து பெரியசாமி மங்களபுரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை தேடி வந்தனர். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியின் காரை சேதப்படுத்தியதாக சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த சுஜித்குமார் (வயது 30) என்பவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்