< Back
மாநில செய்திகள்
வாலிபர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

வாலிபர் கைது

தினத்தந்தி
|
8 Aug 2022 3:33 AM IST

மது குடிக்க பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது

பேட்டை:

நெல்லையை அடுத்த பேட்டை மயிலப்பபுரத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் மாடசாமி (வயது 40) கூலி வேலை செய்து வருகிறார். பேட்டை வி.வி.கே. தெருவை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகன் மகாராஜன் (19). நேற்று முன்தினம் கருங்காடு ெரயில்வே கேட் அருகே நடந்து சென்றபோது மகாராஜன் மது குடிப்பதற்காக மாடசாமியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டு உள்ளார். இதுகுறித்து மாடசாமி பேட்டை போலீசில் புகார் அளித்தார். பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாராஜனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்