< Back
மாநில செய்திகள்
இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து; வாலிபர் கைது
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து; வாலிபர் கைது

தினத்தந்தி
|
26 July 2022 11:46 PM IST

கல்லாவி அருகே இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து; வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஊத்தங்கரை

கல்லாவி அருகே உள்ள வீராட்சி குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். இவரும், மூர்த்தி (30) என்பவரும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து வந்தனர். இந்த நிலையில் மூர்த்தி கேரளாவிற்கு வேலைக்காக சென்றார். அப்போது அந்த இளம்பெண் வேறு ஒருவரை காதலித்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். கடந்த 25-ந் தேதி ஊருக்கு வந்த மூர்த்தி, காதலியை பார்க்க சென்றார். அப்போது அவருக்கு திருமணம் ஆன தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து காதலியிடம் கேட்டுள்ளார். மேலும் காதலித்த காலத்தில் உனக்கு செலவு செய்த ரூ.6 லட்சத்தை திரும்ப தா என்று மூர்த்தி கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மூர்த்தி அந்த பெண்ணை தாக்கி கத்தியால் குத்தினார். இதில் காயம் அடைந்த அவர் கல்லாவி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூர்த்தியை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்