< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
சிறுமி பாலியல் பலாத்காரம்; வாலிபர் கைது
|26 July 2022 11:30 PM IST
ஓசூரில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே சின்ன மட்டாரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 21). இவர் சூளகிரியில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். இது குறித்து, சிறுமியின் தாயார், ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி, விசாரணை நடத்தி தங்கவேலை போக்சோ பிரிவின்கீழ் கைது செய்தார்.