< Back
மாநில செய்திகள்
பிளஸ்-2 மாணவியை கடத்திய தஞ்சை வாலிபர் கைது
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

பிளஸ்-2 மாணவியை கடத்திய தஞ்சை வாலிபர் கைது

தினத்தந்தி
|
9 July 2022 10:51 PM IST

காவேரிப்பட்டணத்தில் சமூக வலைதளம் மூலம் பழகி பிளஸ்-2 மாணவியை கடத்திய தஞ்சை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

காவேரிப்பட்டணம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்தவர் அபினேஷ் (வயது 24). கல்லூரி படிப்பு முடித்து வேலை தேடி வந்தார். இவருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவிக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் பள்ளி செல்வதாக கூறி சென்ற மாணவி திடீரென மாயமானார். மகளை பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் எங்கும் காணவில்லை. இதுகுறித்து பெற்றோர் நாகரசம்பட்டி போலீசில் புகார் செய்தனர். அதில் அபினேஷ் மீது சந்தேகம் உள்ளதாக கூறியிருந்தனர். இந்த நிலையில் மாணவி அபினேசுடன் கோவையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று மாணவியை மீட்டனர். மேலும் அபினேசை கைது செய்தனர். அவர் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்