< Back
மாநில செய்திகள்
வாலிபர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

வாலிபர் கைது

தினத்தந்தி
|
8 July 2022 1:20 AM IST

வாலிபர் கைது

பேட்டை:

நெல்லை அருகே பேட்டை இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் மற்றும் போலீசார் கட்டபொம்மன் தெரு வட பத்திரகாளி அம்மன் கோவில் கொடை விழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவிலுக்கு வந்த பக்தர்களிடம் வாலிபர் ஒருவர் அரிவாளை காட்டி அச்சுறுத்தும் செயலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில், அவர் பேட்டை திரிபுரசுந்தரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணி என்ற கார்த்திக் (19) என்பதும், இவர் தச்சு தொழில் செய்து வருவதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த அரிவாளை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்