< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
செல்போன்கள் திருடிய வாலிபர் கைது
|6 July 2022 8:29 PM IST
ஓசூரில் செல்போன்கள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்
ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேலாளராக பணியாற்றி வருபவர் பிரவீன் (வயது 26). சம்பவத்தன்று, இவரது 2 செல்போன்களை, வாலிபர் ஒருவர் திருடி சென்றார். இதை கவனித்த பிரவீன், அந்த நபரை கையும் களவுமாக பிடித்து, ஓசூர் டவுன் போலீசிடம் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கொத்தூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து 2 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.