< Back
மாநில செய்திகள்
கோவிலில் திருடிய வாலிபர் கைது
நாமக்கல்
மாநில செய்திகள்

கோவிலில் திருடிய வாலிபர் கைது

தினத்தந்தி
|
22 Oct 2023 12:15 AM IST

நாமக்கல் அருகே கோவிலில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் அருகே வள்ளிபுரம் போயர் தெருவில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 18-ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு, பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர், சாமி கழுத்தில் அணிந்திருந்த 5¼ பவுன் நகையை திருடி சென்றார்.

இது குறித்து கோவில் தர்மகர்த்தா செல்வம், நல்லிபாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்தேகத்தின் பேரில் அதேபகுதியை சேர்ந்த சிவா (வயது 26) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சாமி கழுத்தில் இருந்த நகையை திருடி அடமானம் வைத்ததை ஒப்பு கொண்டார். அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்