< Back
மாநில செய்திகள்
கள்ளத்தொடர்பு விவகாரத்தில் டிரைவரை தாக்கிய வாலிபர் கைது
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

கள்ளத்தொடர்பு விவகாரத்தில் டிரைவரை தாக்கிய வாலிபர் கைது

தினத்தந்தி
|
20 July 2023 12:15 AM IST

சூளகிரி அருகே கள்ளத்தொடர்பு விவகாரத்தில் டிரைவரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சூளகிரி

கள்ளத்தொடர்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள காருபாலாவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 38). டிரைவர். இவரது மனைவி ரூபா (28). அதே பகுதியை சேர்ந்தவர் ஜாவித் (21). இவருக்கும், ரூபாவிற்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. கடந்த 17-ந் தேதி இரவு ராமச்சந்திரன் வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டில் ரூபாவும், ஜாவித்தும் இருந்துள்ளனர்.

இதை பார்த்த ராமச்சந்திரன், அவர்கள் 2 பேரையும் கண்டித்துள்ளார். அப்போது ரூபாவும், ஜாவித்தும் சேர்ந்து ராமச்சந்திரனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

வாலிபர் கைது

இதுகுறித்து அவர் சூளகிரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜாவித்தை கைது செய்தனர். இதே போல ஜாவித் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் தன்னை ராமச்சந்திரன் தரப்பினர் தாக்கியதாக கூறியிருந்தார். அதன் பேரில் ராமச்சந்திரன், வெங்கடராமன் (40) சோமசேகர் (20) மற்றும் 18 வயது நபர் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்