சென்னை
தந்தை திட்டியதால் பெரம்பூர் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர்
|தந்தை திட்டியதால் பெரம்பூர் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
வெடிகுண்டு மிரட்டல்
சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் ெதாடர்பு கொண்ட மர்ம ஆசாமி, "பெரம்பூர் ெரயில் நிலையத்தில் வெடிகுண்டுகளுடன் மர்ம நபர்கள் சுற்றித்திரிகிறார்கள். அவர்கள் வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்வார்கள்" கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். உடனடியாக பெரம்பூர் ெரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் சென்னை ெரயில்வே போலீஸ் எஸ்.பி. உமா, செம்பியம் போலீஸ் உதவி கமிஷனர் செம்பேடு பாபு, ெரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், செம்பியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் ெரயில்வே பாதுகாப்பு படையினர், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் பெரம்பூர் ரெயில் நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அங்கிருந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகள் என அனைத்து இடங்களிலும் ேசாதனை நடத்தினர். ஆனால் தொலைபேசியில் மர்மநபர் கூறியதுபோல் வெடிகுண்டுகளுடன் யாரும் சிக்கவில்லை. பின்னர்தான் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.
வாலிபருக்கு எச்சரிக்கை
பின்னர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் எண்ணை வைத்து நடத்திய விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது, அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரவீன் என்ற பரத்குமார் (வயது 24) என்பது தெரியவந்தது. செம்பியம் போலீஸ்சார் பிரவீனை பிடித்து விசாரணை செய்தனர்.அதில் போதைக்கு அடிமையான பிரவீன், சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. சம்பவத்தன்று அவரை தந்தை திட்டியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து பெரம்பூர் ெரயில் நிலையத்தில் வெடிகுண்டுகளுடன் மர்மநபர்கள் சுற்றித்திரிவதாக மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
அவரை போலீசார் எச்சரித்து, அறிவுரை வழங்கி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.