< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
கல்லூரி மாணவியை கர்ப்பிணியாக்கிய வாலிபர்
|23 Sept 2023 12:15 AM IST
குறிஞ்சிப்பாடி அருகே கல்லூரி மாணவியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
குள்ளஞ்சாவடி,
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் கடலூரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 22 வயதுடைய வாலிபர், மாணவியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இதில் அந்த மாணவி தற்போது 2 மாத கர்ப்பிணியாக உள்ளார். இது குறித்து மாணவி, குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.