< Back
மாநில செய்திகள்
விக்கிரவாண்டியில் குளிர்பானம் குடித்த வாலிபர் திடீர் சாவு
மாநில செய்திகள்

விக்கிரவாண்டியில் குளிர்பானம் குடித்த வாலிபர் திடீர் சாவு

தினத்தந்தி
|
17 July 2024 3:46 AM IST

விக்கிரவாண்டியில் குளிர்பானம் குடித்த வாலிபர் திடீரென உயிரிழந்தார்.

விக்கிரவாண்டி,

கள்ளக்குறிச்சி காட்டு காலனி வடமருதூரை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 26). இவர் சென்னை அம்பத்தூரில் உள்ள பல்பொருள் அங்காடியில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று காலை தனது ஊருக்கு செல்ல கள்ளக்குறிச்சி செல்லும் அரசு பஸ்சில் பயணம் செய்தார். விக்கிரவாண்டி அருகே உள்ள தனியார் ஓட்டலில் பஸ் நின்றபோது அதில் இருந்து இறங்கிய அவர், அங்கு குளிர்பானம் வாங்கி குடித்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்த தகவலின் போில் விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரசாந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரடைப்பு காரணமாக பிரசாந்த் மயங்கி விழுந்து இறந்தாரா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்