< Back
மாநில செய்திகள்
அஞ்சுகிராமம் அருகே டீக்கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

அஞ்சுகிராமம் அருகே டீக்கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
28 July 2023 3:16 AM IST

அஞ்சுகிராமம் அருகே டீக்கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அஞ்சுகிராமம்:

அழகப்பபுரத்தை சேர்ந்தவர் சிற்றரசு (வயது 44). இவருக்கு மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். மனைவி கருத்து வேறுபாடு காரணமாக 5 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்று விட்டார். இதனால் சிற்றரசு தாயார் திலகத்துடன் வசித்து வந்தார். அவர் மேட்டுக்குடியிருப்பு லெட்சுமிபுரத்தில் டீக்கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் விபத்தில் சிக்கி கால் சரிவர நடக்க முடியாமல் சமீப காலமாக அவதிப்பட்டு வந்தார்.

ஏற்கனவே மனைவி பிள்ளைகள் பிரிந்து சென்ற கவலையில் இருந்து வந்த சிற்றரசு நேற்று முன்தினம் இரவு வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்ட தாயார் திலகம் அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

---

மேலும் செய்திகள்