< Back
மாநில செய்திகள்
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது
திருச்சி
மாநில செய்திகள்

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது

தினத்தந்தி
|
1 Jun 2022 9:41 PM GMT

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களின் பொது தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணி வருகிற 17-ந்தேதி வரை நடக்கிறது.

விடைத்தாள் திருத்தும் பணி

திருச்சி மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் படித்த எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ- மாணவிகளுக்கு பொதுத்தேர்வுகள் தற்போது நிறைவடைந்து உள்ளன. அதன்படி பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மாதம் (மே) 5-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை நடைபெற்றது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 6-ந்தேதி தொடங்கி 30-ந்தேதி வரை நடைபெற்றது. பிளஸ்-1 தேர்வு 10-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை நடைபெற்றது.

இந்தநிலையில், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகள் எழுதிய விடைத்தாள்களை திருத்தும் பணி திருச்சி கல்வி மாவட்டமான திருச்சி, மணப்பாறை, லால்குடி, முசிறி, ஆகிய இடங்களில் நேற்று தொடங்கியது. இதையொட்டி லாரி மூலம் கொண்டுவரப்பட்ட விடைத்தாள்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தேர்வு முடிவுகள்

இதில் திருச்சியில் 2 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்றது. இந்த மையத்தில் முகாம் அலுவலராக மாவட்ட கல்வி அதிகாரி செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். விடைத்தாள் திருத்தும் பணியில் 850 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பணி வருகிற 17-ந்தேதி வரை நடைபெறுகிறது. ஒரு ஆசிரியர் நாள் ஒன்றுக்கு 30 விடைத்தாள்களை மட்டுமே திருத்த வேண்டும் என்றும் இயற்பியல், வேதியியல், கணித பாட விடைத்தாள்களை ஒரு ஆசிரியர் நாள் ஒன்றுக்கு 24 விடைத்தாள்களை மட்டுமே திருத்த வேண்டும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது.

பிளஸ்-1 மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி வருகிற 9-ந்தேதி தொடங்கும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்த பின் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வருகிற 17-ந்தேதியும், பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 23-ந்தேதியும், பிளஸ்-1 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் ஜூலை 7-ந்தேதியும் வெளியாக உள்ளன.

மேலும் செய்திகள்