< Back
தமிழக செய்திகள்
உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
ராமநாதபுரம்
தமிழக செய்திகள்

உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

தினத்தந்தி
|
13 Oct 2023 12:15 AM IST

உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.

தொண்டி,

திருவாடானை தாலுகா திருவெற்றியூரில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பாகம்பிரியாள் சமேத வல்மீகநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று 9 பிரார்த்தனை உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில் ரூ.13 லட்சத்து 75 ஆயிரத்து 85, 75 கிராம் தங்கம், வெள்ளி 830 கிராம் கிடைத்தன.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன், தேவஸ்தான மேலாளர் இளங்கோ, அறநிலையத்துறை ஆய்வாளர் சண்முகசுந்தரம், சரக கண்காணிப்பாளர் செந்தில்குமார், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்