திண்டுக்கல்
உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
|தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பில் பிரசித்தி பெற்ற சவுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி 3 மாதத்திற்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். கடந்த ஏப்ரல் 18-ந்தேதி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அதன்பின்னர் திருவிழாக்கள் நடந்ததால் எண்ணும் பணி நடைபெறவில்லை. தற்போது ரூ.2 ஆயிரம் நோட்டுகள் மாற்றுவதற்கு வங்கியில் கால அவகாசம் முடியும் தருவாயில் உள்ளது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது.
இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சுரேஷ், கோவில் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி, உறுப்பினர்கள் ஈஸ்வரி ஸ்டோர் வாசு, கேப்டன் பிரபாகரன், சுசீலா ராமானுஜம், கோவில் செயல் அலுவலர் முருகன், ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இந்த பணியில் இந்து கோவில் ஆன்மிக சேவை குழு மற்றும் பொதுமக்கள் பலர் ஈடுபட்டனர். அதில் உண்டியல் காணிக்கை வருவாயாக ரூ.22 லட்சத்து 60 ஆயிரத்து 517, 26 கிராம் தங்க நகைகள், 112 கிராம் வெள்ளி நகைகள் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்தது.