< Back
மாநில செய்திகள்
கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
சிவகங்கை
மாநில செய்திகள்

கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

தினத்தந்தி
|
15 Jun 2023 12:21 AM IST

கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வேங்கைபட்டி சாலையில் சித்தர் முத்து வடுகநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் சுகன்யா தலைமையில் செயல் அலுவலர் பாலாஜி முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. வணிகர் நல சங்க தலைவர் வாசு, துணைத்தலைவர் சரவணன், பொருளாளர் சிவக்குமார், இணை செயலாளர் திருமாறன் ஆகியோர் உடன் இருந்தனர். உண்டியலில் 3 லட்சத்து 33 ஆயிரத்து 976 ரூபாய் இருந்தது.

மேலும் செய்திகள்