< Back
மாநில செய்திகள்
காவல்துறை மீதான புகார்களை விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு அதிகாரம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு
மாநில செய்திகள்

காவல்துறை மீதான புகார்களை விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு அதிகாரம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு

தினத்தந்தி
|
24 Nov 2022 3:59 PM IST

காவல்துறை மீதான புகார்களை விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

காவல்துறை மீதான புகார்களை விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறை ஆணைய விதிமுறைகளை சீரமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 12 விதமான விதிமுறைகள் அந்த அரசாணையில் இடம்பெற்றுள்ளன.

காவல்துறை அதிகாரிகளின் பணியிட மாற்றம் உள்ளிட்டவை தொடர்பாக முடிவெடுக்க மாநில அளவிலும், சென்னை அளவிலும் கமிட்டி அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. காவல்துறையினர் மீதான துறை ரீதியான புகார்களை சிபிசிஐடி போலீசார் விசாரிக்கவும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இப்புகார்களை 6 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும். ஓய்வு பெற்ற காவல்துறை உயர் அதிகாரிகளையும் விசாரணைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியை விசாரணைக்கு ஏன் பயன்படுத்துகிறோம் என்பதற்கு டிஜிபியிடம் முக்கூட்டியே அனுமதி பெறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்