< Back
மாநில செய்திகள்
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
மாநில செய்திகள்

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

தினத்தந்தி
|
31 Oct 2023 7:11 PM IST

சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை,

தமிழக அமைச்சரவையின் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெறும் என்றும், இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் பொருள் குறித்த விவரங்கள் தனியாக அனுப்பி வைக்கப்படும் என்றும் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், நீண்ட நாள் சிறைவாசிகள் விடுதலை, அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர் மாநாடு கிழக்கு, கடற்கரை சாலை விரிவாக்கம், வட கிழக்கு பருவமழை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்