< Back
தமிழக செய்திகள்

விருதுநகர்
தமிழக செய்திகள்
மாணவிகளை அழைத்து பாராட்டிய சூப்பிரண்டு

19 Aug 2023 1:41 AM IST
மாணவிகளை அழைத்து சூப்பிரண்டு பாராட்டினார்.
நரிக்குடி அரசு தொடக்கப்பள்ளி மாணவிகள் மோகன ஸ்ரீ, சபர்ணா, தேவிகா ஆகியோர் உலக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியை பஸ்சில் தவறவிட்ட 2½ பவுன் தங்க சங்கிலியை கண்டெடுத்த நிலையில் அதை நரிக்குடி போலீசார் மூலம் தமிழாசிரியை சசிகலாவிடம் ஒப்படைத்தனர். பள்ளி மாணவிகளின் நேர்மையை பாராட்டும் வகையில் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் மாணவிகளை தனது அலுவலகத்திற்கு அழைத்து அவர்களின் நேர்மையை பாராட்டியதோடு அவர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார்.