< Back
மாநில செய்திகள்
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை 207 போலீசார் எழுதினர்
சேலம்
மாநில செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை 207 போலீசார் எழுதினர்

தினத்தந்தி
|
27 Jun 2022 1:02 AM IST

சேலத்தில் சப்-இன்ஸ்பெக்டர் எழுத்து தேர்வை 207 போலீசார் எழுதினர்.

சேலத்தில் சப்-இன்ஸ்பெக்டர் எழுத்து தேர்வை 207 போலீசார் எழுதினர்.

எழுத்து தேர்வு

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 444 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் வெளியிடப்பட்டது. இந்த பணிக்கு ஆண்கள், பெண்கள் என மொத்தம் 2.21 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இவர்களுக்கான முதன்மை எழுத்து தேர்வு, தமிழ் தகுதி தேர்வு நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. இதில் காவல்துறையின் 20 சதவீத இடஒதுக்கீட்டில் விண்ணப்பம் செய்திருந்த இரண்டாம் நிலை காவலர்கள், முதல்நிலை காவலர்கள், தலைமை காவலர்களுக்கு நேற்று முதன்மை எழுத்து தேர்வு நடைபெற்றது.

207 பேர் பங்கேற்பு

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் சேலம் அம்மாபேட்டை ஏ.வி.எஸ்.பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட மையத்தில் கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பணியாற்றி வரும் காவல்துறை சார்ந்த போலீசார் 253 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதில் 39 பேர் பெண்கள் ஆவர். காலை 8 மணிக்கே சிலர் தேர்வு மையத்திற்கு வரத்தொடங்கினர். அவர்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் தலைமையிலான போலீசார் பரிசோதனை செய்து உள்ளே அனுப்பி வைத்தனர்.

தேர்வு மையத்திற்குள் செல்போன், கெடிகாரம் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கி 12.30 மணிக்கு முடிந்தது. இதில் 207 போலீசார் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 46 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வில் எவ்வித முறைகேடும் நடைபெறாமல் இருக்கும் வகையில் 50 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தேர்வினை விஜிலென்ஸ் டி.ஐ.ஜி.லட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்