< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
சாலையில் கிடந்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த சப்-இன்ஸ்பெக்டர்
|25 Sept 2023 1:04 AM IST
சாலையில் கிடந்த பணப்பையை சப்-இன்ஸ்பெக்டர் உரியவரிடம் ஒப்படைத்தார்.
பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் நெடுஞ்சாலை போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது துறைமங்கலம் மூன்று ரோடு செல்லும் சாலையில் பணப்பை ஒன்று கிடப்பதை கண்டார். பின்னர் அவர் அதனை எடுத்து அதில் உள்ள முகவரியை வைத்து விசாரித்ததில், வேப்பந்தட்டை தாலுகா, அரசலூர் கிராமத்தை சேர்ந்த கிஷோர்குமாருக்கு சொந்தமானது தெரியவந்தது. பின்னர் அவருக்கு தகவல் அளித்து வரவழைத்து அவரது அடையாள அட்டை, ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் ரூ.2,050 ஆகியவை அடங்கிய பணப்பையை பத்திரமாக ஒப்படைத்தார். சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜனின் இந்த செயலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பாராட்டினார்.