வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் ஆய்வுக் கூட்டம்
|வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
சென்னை,
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் இன்று (22.01.2024) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், நகர் மற்றும் ஊரமைப்பு இயக்ககம், கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மற்றும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமம் ஆகியவற்றால் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், 2024-2025 ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள் ஆகியவை தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர், சி. சமயமூர்த்தி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி எஸ். முருகன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குனர், எ.சரவணவேல்ராஜ், நகர் மற்றும் ஊரமைப்பு துறை இயக்குனர் பா.கணேசன், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழும உறுப்பினர் செயலர் ஐ.ஜெயகுமார், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.