< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

ேராஜா பூ கொடுத்து ஆசிரியைகளை வரவேற்ற மாணவிகள்

தினத்தந்தி
|
6 Sept 2023 12:47 AM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டப்பட்டது.

ஆசிரியர் தின விழா

நாடு முழுவதும் ஆசிரியர் தின விழா நேற்று மிகச் சிறப்பாக அனைத்து பள்ளிகளிலும் கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.

ராமநாதபுரத்தில் உள்ள வள்ளல் பாரி அரசு நடுநிலைப்பள்ளியில் நேற்று நடந்த ஆசிரியர் தின விழாவில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அப்போது பள்ளியில் நடந்த விழாவுக்கு வந்த ஓய்வு பெற்ற ஆசிரியர்களை பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளும் மற்றும் தற்போது பணியில் உள்ள ஆசிரியர்களும் பூ கொடுத்தும் கைதட்டியும் வரவேற்றனர்.

இதை தொடர்ந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களுடன் இணைந்து கேக் வெட்டி ஆசிரியர் தின விழாவை கொண்டாடினார்கள். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை எஸ்தர்வேணி உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், பெற்றோர் திரளாக கலந்து கொண்டனர்.

பூ கொடுத்து வரவேற்பு

இதேபோல் ராமேசுவரம் எஸ்.பி.ஏ.அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஆசிரியர் தின விழாவில் பள்ளிக்கு வந்த அனைத்து ஆசிரியைகளுக்கும் மாணவிகள் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்பு கொடுத்தனர். பின்னர் மாணவிகள் அனைவரும் ஆசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். ஆசிரியர் தின விழாவை தொடர்ந்து தலைமை ஆசிரியை ரஞ்சனி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களுக்குள் ஒருவருக்கொருவர் கை கொடுத்து வாழ்த்துக்கள் தெரிவித்தும் குரூப்பாக நின்று செல்பியும் எடுத்து மகிழ்ந்தனர்.

இதே போல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர் தின விழாவானது பல்வேறு நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சாயல்குடி

சாயல்குடி அருகே மலட்டாறு விலக்கு ரோடு பகுதியில் உள்ள வி.வி.எஸ். எம்.நேஷனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். தாளாளர் சந்திரா, பள்ளி முதல்வர் அங்காள ஈஸ்வரி முன்னிலை வகித்தனர். ஆசிரியை முத்துரத்தினம் வரவேற்றார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கைப்பேசியால் வாழ்வில் அறிவு வளர்கிறதா வீழ்ச்சி அடைகிறதா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. நிகழ்ச்சிகளை ஆசிரியை சத்யா தேவி தொகுத்து வழங்கினார். ஆசிரியர் ராமபாண்டியன் நன்றி கூறினார்.

இதே போல் கடலாடி கருங்குளம் சங்கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தாளாளர் சேகர் தலைமை தாங்கினார். சிக்கல் பானு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் பஷீர் அகமது தலைமை தாங்கினார். வாலிநோக்கம் விலக்கு ரோட்டில் அமைந்துள்ள சரண்யா மெட்ரிக் பள்ளியில் தாளாளர் சரண்யா பால்சாமி தலைமையில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்