< Back
மாநில செய்திகள்
நகராட்சி பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி வரவேற்பு
தென்காசி
மாநில செய்திகள்

நகராட்சி பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி வரவேற்பு

தினத்தந்தி
|
15 Jun 2023 12:15 AM IST

கடையநல்லூர் நகராட்சி பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.

கடையநல்லூர்:

மேலக்கடையநல்லூர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் புதிதாக வந்த மாணவ-மாணவிகளுக்கு நகர்மன்ற தலைவர் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் மணிமாறன், வட்டாரக்கல்வி அலுவலர் மகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் அமைக்கப்பட்டது.

தொடர்ந்து குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தக் கூடாது என்றும் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பள்ளி மேலாண்மைக்குழு திருமலை வடிவு வரவேற்றார். கவுன்சிலர்கள் முத்துலட்சுமி, ராமகிருஷ்ணன், மாரி, பள்ளி மேலாண்மை குழு கல்வியாளர் தேவராஜ், வட்டார ஆசிரியர் பயிற்றுனர் வசந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். இடைநிலை ஆசிரியை ஆயிஷா பானு நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்