ராணிப்பேட்டை
கிளாந்தாங்கல் தெருக்களில் மழைநீருடன் கழிவுநீர் தேங்கும் அவலம்
|கிளாந்தாங்கல் தெருக்களில் மழைநீருடன் கழிவுநீர் தேங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
திமிரி
கிளாந்தாங்கல் தெருக்களில் மழைநீருடன் கழிவுநீர் தேங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
கலவையை அடுத்த கிளாந்தாங்கல் கிராமத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதியில் மழை நீருடன் கழிவு கலந்து சாலைகளில் குளம் போல் தேங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கழிவுநீர் கலந்த நீரில் கொசு புழுக்களின் உற்பத்தி அதிகமாக இருப்பதால் டெங்கு, மலேரியா போன்ற வைரஸ் காய்ச்சல் ஏற்படுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். மேலும் புதர் போல் புல் மண்டி கிடக்கும் சாலையில் இரவு நேரங்களில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக கழிவு நீரை வெளியேற்றி புதர் போல் மண்டி கிடைக்கும் சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.