< Back
மாநில செய்திகள்
சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து கோசாலையில் அடைக்கப்படும்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து கோசாலையில் அடைக்கப்படும்

தினத்தந்தி
|
13 Aug 2023 12:15 AM IST

சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து கோசாலையில் அடைக்கப்படும்

வேதாரண்யம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் வெங்கட்ட லெட்சுமணன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேதாரண்யம் நகராட்சி பகுதியில் ஆடு, மாடுகளை வீட்டில் கட்டிப்போட்டு வளர்க்க வேண்டும். மீறி நகர் பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து உடனடியாக கோசாலையில் அடைக்கப்படும். உரிமையாளர்கள் மாடுகளை அபாரதம் செலுத்தி மீட்க வேண்டும். நகராட்சி கடைவீதிகளில் மாடுகளை திரியவிட கூடாது. நகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கும் பணி விரைவில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்