< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
வைக்கோல் போர் தீயில் எரிந்து நாசம்
|21 March 2023 12:45 AM IST
இலுப்பூர் அருகே வைக்கோல் போர் தீயில் எரிந்து நாசமானது.
இலுப்பூர் அருகே உள்ள ஆச்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மாமுண்டி. இவருக்கு சொந்தமான வைக்கோல்போர் நேற்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதையடுத்து அருகே இருந்தவர்கள் உடனடியாக இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் ஏராளமான வைக்கோல் போர் தீயில் எரிந்து நாசமானது.