< Back
மாநில செய்திகள்
வேலூர்
மாநில செய்திகள்
வைக்கோல் போர் திடீரென தீப்பற்றி எரிந்தது
|23 Oct 2023 12:15 PM IST
சேர்க்காடு அருகே வைக்கோல் போர் திடீரென தீப்பற்றி எரிந்தது.
காட்பாடி தாலுகா மேல்பாடியை அடுத்த சேர்க்காடு முத்தரசிக்குப்பம் ராஜா வீதியை சேர்ந்தவர் லட்சுணரெட்டி. இவர் தனது வீட்டின் அருகே வைக்கோல் போர் வைத்திருந்தார். இந்த நிலையில் திடீரென வைக்கோல் போர் தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து காட்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் நிலைய அலுவலர்கள் பால்பாண்டி, முருகேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அனைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து மேல்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.