< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நடிகை ஷகிலாவை கீழே தள்ளி விட்டு கொடூரமாக தாக்கிய வளர்ப்பு மகள்
|20 Jan 2024 11:45 PM IST
கீழே தள்ளிவிட்டு அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கோடம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை,
நடிகை ஷகிலா மீது அவரது வளர்ப்பு மகள் சீத்தல் தாக்குதல் நடத்தியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஷகிலாவின் வளர்ப்பு மகள் சீத்தல். இவரது தாய் சசி, சகோதரி ஹமீலா ஆகியோர் ஷகிலாவை தாக்கியதாகவும், சமாதானப்படுத்த சென்ற ஷகிலாவின் வழக்கறிஞர் சவுந்தர்யா மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகை ஷகிலாவை அடித்து கீழே தள்ளிவிட்டு அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கோடம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக ஷகிலாவின் அண்ணன் மகளான சீத்தல் என்பவரை 6 மாத கைக்குழந்தையில் இருந்து நடிகை ஷகிலா வளர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.